பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திர நகர் சைவசித்தாந்த சபையின் இருபத்திரண்
டாவது வருட பூர்த்திக் கொண்டாட்ட மகா
சபை அக்கிராசனாதிபதி ஸ்ரீமான் பொ.
பாண்டித் துரைஸாமித் தேவரவர்களை
வாழ்த்தி வழுத்திய ஆசிரியப்பா.
பூவுல கதனிற் பொருந்துபன் னாட்டில்
தேவரு முனிவருஞ் சிறப்புற் றுறைய
அந்தணர் பசுக்க ளறத்தொடு பெருகச்
சந்தத மின்பந் தழைத்துநனி பொங்கப்
பாண்டிநன் னாட்டிற் பல்வள நிறைந்து
வேண்டிய வெல்லாம் விரைந்துட னளிக்குஞ்
சீலமு நன்மையுஞ் செறிந்து விளங்கும்
பாலவ நத்தப் பதிசெய் தவத்தாற்
சாலவு நல்லறந் தளிர்த்து வளரக்
கால வரம்பின் கணக்கொன் றின்றி
யாண்டுநல் லுயிர்களை யருளொடு புரக்கும்
பாண்டித் துரையெனப் பகர்பே ரரசே!
யாண்டுங் கல்வி யினிதுற மணக்க
ஈண்டு மறுமையு மின்பம் பெருக
மதுரையம் பதியில் வண்டமிழ்ச் சங்கங்
கதியுற நடாத்துங் கருத்தையுட் கொண்டு
முன்னா ளாக்கிய முடிமன்னர் போல
இந்நா ளாக்கி யிசையுற்ற வள்ளால்!
அன்புடன் கருணை யகத்திடை மருவி
இன்புட னெவரு மென்றும் வாழ
உன்னியிங் கெவர்க்கு மோரரு மருந்தாய்ப்
பின்னிய வறுமைப் பிணியெலா மகல
21