பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு
விரும்பிய வெல்லாம் விரும்பிய வாறே
விரும்பிநன் களிக்கு மேன்மக்கண் முதல்வ!
உலகுக் கெல்லா மொருமுத லாகிப்
பலவகை தோற்றும் பண்பு மரீஇய
கடவுளி னருட்பலன் கருத்துட் கொண்டு
திடமொடு சுகிக்கச் செவ்விதி னல்கும்
பண்பார் சைவப் பயிர்நனி வளர்த்தல்
கண்பார்த் தியற்றுங் கருணையங் கொண்டால்!
முன்ன முவந்து முழுமுதற் கடவுள்
நன்னயம் வழங்கு நந்தா யுமைக்குத்
திருமந் திரத்தைச் செவியுறச் சொற்ற
திருமந் திரமெனுஞ் செய்யவிங் நகரி
லுறையுநன் மாந்த ருய்யும் வண்ணம்
இறையென வந்த வின்னுயிர்த் துணைவ!
இந்நகர் தன்னி லியைவுறு மாக்கள்
தந்நல முணர்ந்து சார்ந்தருள் பெற்றிடச்
சைவ நேயராற் றாபித்துள்ள
சைவசித் தாந்த சபையி னிருபத்
திரண்டாம் வயதுமுற் றெய்துங் காலைத்
திரண்ட பலர்க்குந் தேவென நின்று
சைவசித் தாந்தந் தமிழெனு மிரண்டுங்
கைவரப் பெற்ற கனிந்தபிர சங்கஞ்
செய்துநம் மிறையாஞ் சிவனடி யெளிதில்
எய்து நெறியை யினிதுறக் காட்டிய
நன்றியைப் போற்றுதல் நம்பெருங்
யென்றிங் கியம்பின ரினியவென் னண்பர்;
உற்றவென் கடமையை யுரிமையிற் செய்திட
22