பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம். . நிற்கின்றதென்பதையும், யான் சிறையில் எனது கால த்தை எவ்வாறு கழித்தேனென்பதையும், எனது சுற்றத்தார்களிலும் நண்பர்களிலும் பார்யாரை எவ் வெவ்வாறு யான் நேசித்து வருகிறேனென்பதையும், எனக்கு அவர்கள் என்ன என்ன உதவிகள் செய்துள்' ளார்களென்பதையும், யான் எனது சிறைவாசத்தில் எவ்வித மேம்பாட்டை அடைந்துள்ளே னென்பதை யும் வெளிப்படுத்தும். யான் சிறையில் சுகமாயிருந்து படித்தற்கும் எழுது தற்கும் எண்ணரிய உதவிகள் புரிந்து யான் அங்கிருந்து எழுதியனுப்பிய நூல்களையும் பிறவற்றை யும் பாதுகாத்து வைத்திருந்து யான் வெளிவந்த பின்னர் என்னிடம் தந்து கோயமுத்தூரில் இனிது வாழ்ந்துவராநின்ற எனது மெய்த்தம்பி சிரஞ்சீவி கோ'. அ. இலக்குமணபிள்ளைக்கும் யான் சிறையுட் புகுந்த நாள்முதல் எனது குடும்பத்தாருடைய சரீரப் பாதுகாப்புக்கும் எனது நூல்களை அச்சிடுவதற்கும் பொருள் உதவிக்கொண்டு தென் ஆபிரிக்காவில் இனிது வாழ்ந்து வராநின்ற எனது மெய்ச்சகோதரர் ஸ்ரீமாந் சொ. விருத்தாசலம்பிள்ளை யவர்களுக்கும் ஸ்ரீமாந் த, வேதியப்பிள்ளை யவர்களுக்கும் யாலும் எனது குடும்பத்தாரும் நன்றியறிதலுள்ளவாயிருக்கக் கட மைப்பட்டுள்ளோம். ) திருமயிலை, சென்னை . ஆனந்தனு தைமியகs வ. உ. சிதம்பரம்பிள்ளை iv