பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணபதி பஞ்சகம்.

யானை முகத்தோனே யைங்கரனே செங்கமலக்
கோனையொரு மாதுலனாக் கொண்டோனே- மானை
யெடுத்தவரின் முன்மகனே யென்னிடுக்க ணீக்கித்
தடுத்தெனையாட் கொள்வாய் சகத்து.
சு.
கணபதியே யூறறுத்துக் காக்கின்ற நல்ல
குணபதியே மெய்ஞ்ஞானக் குன்றே - மணமகளை
நீங்கிச் சிறையிருக்க நேர்ந்தவிதி போக்கியவட்
பாங்கிருக்கச் செய்வாய் பரிந்து.
2.
விக்கினங்க டீர்த்து விரைந்தளிக்கு மீச்சுரனே
தக்கமனை மக்க டனித்திருக்க -- மிக்க
மனக்கவலை கொண்டு வருந்துமெனைக் காக்க
மனக்கருணை பூண்பாய் மகிழ்ந்து.
இடையூறு நீக்குகின்ற வென்றந்தா யின்றென்
னிடையூறு நீக்கியரு ளென்னை - மடமனையாள்
நீங்கி யிருந்திரங்க னீதியோ யானவளைத்
தாங்கிமகி ழச்செய் தயை
மக்களுனைச் சேரும் வரமளிக்கு மான்மருகா
மக்களெனைச் சேரும் வரமளிப்பாய்- தக்க
மனைபிரிந்து வாழ்தலினும் வாழாது மாய்தல்
எனைவருந்தச் செய்யா திவண்.

26