பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு

ஆழித் தடம்படு மான்ற பொருள்பல வாகிநிற் போய், ஊழிற் பயனை யொழிக்குந் திறத்தினை யொன்றி நிற்போய், கூழிற் சிறந்தவென் கூறரு மக்களைக் கூட வெற்குப், பாழிற் சிறைதந்த பாலற நன்குகண் பார்த் தருளே. சு மலையாகி நின்றுபல மாண்புற்றோ யெம்மை யலையாத நற்செயலை யாக்கு - நிலையான செங்கோ லெடாது தினமு மெமைவாட்டுகின்ற வெங்கோ லெடுத்ததென் வேந்து. எ மாமலை கொண்டுள வான்பொருள் யாவுமா மன்னி நிற்போய், பாமலை யாகநின் பால்வர வென்றுமே பார்த்துநிற்போய், ஏமமில் லாதிவ ணின்னலே துய்த் துள வேழையனைச், சேமமே நல்குமென் சீருயர் நாட்டொடு சேர்த்தருளே. அ வானாகி மீன்மதிய மாணிரவி நின்றொளிரத் தானமதை யீகின்ற தண்ணளியோ - யீனச் சிறையுள்ளே நின்றின்று தீயவெலாந் துய்க்கக் குறையென்னே செய்தேன்காண் கூறு. வானின் மழையாகி மாநிலங் காக்கின்ற மாண் புடையோய், கோனின் முறையாகிக் கூறறு நன்மை கள் கூட்டுவிப்போய், ஊனி னுயிர்க்கெலா மூழ்ப்பயன் மாறாதிங் கூட்டுவிப்போய், நானில நீத்திவ ணைவேனை யின்பினு ணாட்டுவையே ய 28