பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு

மீனி னொளியென்ன மேதினி யெங்கணு மேவி நிற்போய்,ஊனி னுயிரென்ன வுண்மையா வெஃதுளு மொன்றிநிற்போய், தேனி னினிப்பென்னச் சிந்தை யுட் கண்டிடச் சென்று நிற்போய்,நானுன் னருளினை நம்பினே னாட்டினை நண்னிடற்கே. கக

உயிராகி யெண்ணி லுடலெல்லாம் புக்குச்
செயிரேகப் பற்பலவுஞ் செய்வோ - யயிராத
வில்வாழ்க்கை வாழ்ந்திலே னென்றென்னைவைத்
வில்வாழ்க்கை வாழ விவண். [தனையோ கஎ

வாழு முயிரெலா மாந்தும் புலன்களா மன்னிநிற் போய், வீழு மெவற்றினும் வீழுறத் தக்கநன் மேன் மையுற்றோய்,கூழு மதுதருங் கூறோணா யாவுமாக் கூடிநிற்போய்,தாழு மெவரினுந் தாழ்ந்தேற்கு நாட்டி னைத் தந்தருளே.

கன்மேந் திரியமாக் காக்கின்ற தெய்வமே
மென்மே லெனதுடலம் வெந்துயராற் - புன்மே
னுனியென்ன வாடியுள நொந்தழிந்த தந்தோ
வினியென்ன வாழ்தலா லிங்கு,

ககூ கன்மேந் திரியங் கவிழும் புலன்களாக் காணநிற் போய், சொன்மேற் பொருளெனச் சூழ்ந்தவர் நெஞ் சுளே தோன்றிநிற்போய், என்மேற் கருத்தினை யீந் துள வென்மனை யெய்திடற்கு, நின்மேற் கருத்தினை நேர்ந்துளே னாட்டினை நேர்குவையே.