பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு
சுந்தரமே என்னுயிரே சோதியே ஏற்காக்கும்
மந்திரமே என்குலத்தின் மாமருந்தே- கந்தன்
திருவருளைப் பெற்றுச் சிறப்புற்ற நின்பேர்
அருளடியைக் கொண்டேன் அகத்து.
முன்னாளின் வள்ளற்கும் முன்னாகத் தந்துதவும்
மன்னா நினையன்றி மாநிலத்தில் - இந்நாள்
ஒருபயனும் நோக்கா துளத்தன்பே கொண்டு
தருபவரைக் கண்டிலன்யான் சார்ந்து.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்"பென் - றெடுத்துரைத்த
வள்ளுவரின் வாக்கைஇனி மாந்தர் கடைப்பிடித்துக்
கொள்ளுவரே நின்செயலைக் கொண்டு.
எனைக்காக்க முன்வந்த என்நண்ப இன்று
நினைப்பார்க்க நாடுதென் நெஞ்சம்- எனைப்பார்க்க
வந்தருள வாய்க்குமோ வள்ளால் நினதுவிடை
தந்தருளச் செய்வாய் தயை.
F
தெய்வஅருள் சேர்க்கும் சிறந்த அறம் இன்பமுத்தி
செய்வலென முன்னின்தேன் செய்திலேன்-- மெய்வாக்
குடன் கருணை கொண்டுள்ள உத்தமனே என்னைத்
திடம்கொண்டு காப்பாய் தினம்.

34
$57