பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு செய்வினையைக் காத்தூழாச் சேர்ப்பிப்ப தல்லாமல் உய்வினையே இல்லை கண்டேன் ஓர்ந்து. தாயே இனித்தளரேன் தாமதியேன் சோம்பலுறேன் பாயே பொருந்தலுறேன் பாரதமாம் - தாயே குலதெய்வம் பாரேயான் கொண்டுளமெய்த் தெய்வம் இலைதெய்வம் வேறே எனக்கு. சான்றாண்மை எய்துதலே தாயுவக்கும் செய்கையந்தச் சான்றாண்மை யின்பயன்மெய் தாள்தொழலே - ஆன் [றாண்மை கொண்டுதன்னா டாள்தல் குலதெய்வம் போற்றிடல் கண்டுதொழல் பாராள்தல் காண். [மெய் கூ ஆதலினால் என் அன்னாய் யான் இன்று பல்நூலும் ஓதலினால் எய்துமுயர் ஓர்வுகொடு - வேதம் பிறந்த அரும் நாடாண்டு பின்னருல காண்டிங் கறந்திரளச் செய்வேன் அறிந்து. தமது மனைவியாருக்கு எழுதிய பாக்கள். சித்தம் பரமளிக்கும் செப்பரிய நல்லின்பம் நித்தம் பெறநோற்கும் நீள்கண்ணாய் - அத்தம் திரட்டுமுறை பற்பலவும் சிந்திக்கத் துன்பம் மிரட்டுசிறை சேர்ந்தேன் விரைந்து. கம்சனெனும் மன்னனது கற்புச் சகோதரியின் வம்சமதில் நம்திருமால் வந்தவனைத் தும்சம் 40