பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு

திருவும் புகழும் சிறந்தன பிறவும்
மருவுற நிற்குமென் மாசிலா மனைவியே!
உன்னது வரவுமென் உயிரினும் இனியநம்
நன்மகார் வரவுமிவண் நல்வர வாகுக.
என்னரும் உயிரினும் என்னுயர் உளத்தினும்
மன்னுறப் பாதியை மகிழ்ந்துனக் களித்தேன்;
பின்னுள பாதியைப் பெரியநம் தேயத்தின்
தன்னடிக் களித்தேன்: சத்தியம் இஃதே.
பிறமகள் எவளையும் பிறதொழில் எதனையும்
உறுவனோ இனியுமென் றுன்னிடேல் அஞ்சிடேல்; ய
இற்பிரிந் திங்கியான் இயற்றும் தவத்தினில்
நிற்பனோ நீடென்று நெஞ்சொடு நினைந்திடேல்;
பெருந்தவ முனிவரும் பின்னிடத் தக்கஎன்
அருந்தவம் இந்நாள் அநேகமா முடிந்தது;
விரைவினில் வெளிவந்து வேண்டுவ செய்துயான்
தரையினில் நின்றறந் தகவொடு நாட்டுவேன்.
தனித்தநும் தவத்தினில் சார்ந்தவோ பலது பர்
கனித்ததும் உடல்மிகக் களைத்ததோ என்பையேல்,
துயரென்பதறிந்திலேன் சுகமொன்றே துய்த்துளேன்
உயருருப் பெற்றுளேன் உரைப்பேன் கேண்மோ: உய
தவத்தினைப் புரிகையில் சரீரம் களைத்திடா
துவப்புறச் செய்தலின் உவமைவே றில்லாச்
சிறியவிரு சட்டைகள் தேகத்தில் புனைந்துவேன்;
சிறியவோர் குல்லாச் சிரத்தினில் தரித்துளேன்;
வெற்றியே தவத்தினும் வேறுள் எஃதினும்

12