பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்யறம்.


“ இந் நூலிற் கறியுள்ள அருமையான பொருள்களை யான் இனி துணர்ந்தேன். இந்நூலை யான் பெரிதும் மதிக் கின்றேன். முற்காலத்திய திருவள்ளுவர் குரளை இக்காலத் திய கருத்துக்களால் பணப்படுத்தி அற்பக் கல்வியுடையாரும் உணரத்தக்கவாறு செய்யலா மென்பதை இந்நூல் காட்டுகன்' றது."--பிரமஸ்ரீ, ச. இராஜகோபாலச் சாரியாரவர்கள்: வைக்கோர்ட்டு வக்சில், சேலம்.

1 மெய்யறம் ” என்னும் நூலைப்படித்தேன். இதற்கு "மெய்யறம்' என்ற பெயர் முற்றிலும் தகும். ஸ்ரீலஸ்ரீ சகஜா நந்த சுவாமி அவர்கள் "வள்ளுவ ரெல்லையிம் மறைக்கு மெல் லையாம்" என்று சிறப்புப் பாயிரத்திற் கூறியது பூரண பொரு ச்த மடையதே, ஆசிரமம் நான்கையும், புருஷார்த்தம் நான் கையும் சுருக்கித் தெளிவறப் போதிக்கும் சத்குருவென்றே இந்நாலைர் சொல்லலாம். இதன் வாக்கும், போக்கும், யாட் பும், பொருளும், கற்றோர் வியக்கும் சாட்சியாக விளங்குகின் றன. இது பன்னூற்படித்துத் தடுமாறச்செய்யும் ஐயப்பாடு களை அறவே யொழித்து உண்மையினுட்பட்ட மீதி யொன் றனையே எடுத்துக்காட்டும் இயல்பிற்று. இதனைத் தமிழின் தெளிவும், அறத்தின் தெளிவும், அறிவின் தெளிவு மென்றே கூறவேண்டும். இதனைத் தமிழுலகத்திற்குத் தந்து பேருப காரம் செய்த ஸ்ரீமாந் பிள்ளையவர்களுக்குத் தமிழுலகம் என்றுங் கைமாறியற்ற இயலாது. இவர்கள் எண்ணிய கரு மத்தை இறைவன் இனிது முடித்துத் தமிழுலகத்தை யுய்யச் செய்வானாக.'-ஸ்ரீமாந் த. வேதியப்பிள்ளை யவர்கள் கிம்பரீலெ, தென் ஆபிரிக்கா,

"இந் நூல் ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் கண்ணனூர் சிறையரணில் வசித்தகாலத்தில் இயற்றிய தமி ழ்ச் செய்யுள் நூல்களில் ஒன்று. இது திருவள்ளுவர் திருக் குறளுக்கு வழி நூல்: திருக்குறளிற் கூறியுள்ள பொருள்களில் நமது நாட்டின் தற்கால நிலைமைகளுக்குப் பொருத்தமாகச் சிலவற்றைத் தொகுத்தும் சிலவற்றை விரித்தும் இது கூறு கின்றது. ஔவையாரது கொன்றைவேந்தன் சூத்திரத்தைப் போன்ற ஒவ்வோர் அடிச் சூத்திரத்தால் இது இயற்றப்பட் டுள்ளது. இது மாணவவியல், இல்வாழ்வியல், அரசியல், அந்த வயல், மெய்யியல் என்னும் ஐந்து இயல்களாகப் vi