பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு செய்யும் மருந்தது தீஉயிர்க்கும் இன்னாங்கு செய்யா திருக்கும் செயல். சிறுசெரல் பின்வரச் செய்கின்ற கண்ணாய் நறுமணம் ஈயும்நம் நாட்டின் - சிறுவர் அருந்திட நல்குவாய் அன்போ டழைத்திம் மருந்தினைத் தாயா மகிழ்ந்து. மீன்றன் இனமென்று மேல்நோக்கும் கண்ணாய்ஓர் கோன்தன் குடியெனும்நம் கூர் இளைஞர் - ஆன்ற அறிவடைந் தெவ்வுலகும் ஆட்சிபுரிந் தின்பச் செறிவடைந்து நிற்பர் சிறந்து. [6

சிவமே பதியெனச் சிந்தித்து நாளும் தவமே இயற்றும் தமியனே பதியென உயிருளும் கொண்டஎன் உயிரின் துணையே! செயிரெலாம் நித்தேன், சிவத்தருள் பெற்றேன், மெய்யறி வடைந்தேன், விளங்கநன் குரைத்தேன், மெய்யறம் உணர்ந்தேன், மேன்பட இயற்றினேன்: இனிஇவண் நிற்றற் கேதுஒன் றில்லை. கனிகொண்ட பின்னர் காட்டிலென் வேலை? கரைந்தே உருகுமென் கண்ணே ! அமுதே! விரைந்தே வருகிறேன், வேண்டுவ தருகிறேன், வருந்துதல் விட்டுநீ மனக்களிப் பொடுரும் திருந்திய மகாரிவண் சிறப்புறப் பேணி யா 44 க