பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவிக்கு எழுதிய பாக்கள் உனக்கும் எனக்கும் மனக்குது குலிப்புடன் ஊழியம் புரிந்திடும் உன்சகோ தரனுடன் வாழிநீ; வாழியான்; மைந்தரும் வாழியே. யரு எவ்வெப் பொழுதில் எஃதெஃது கேட்பேனோ அவ்வப் பொழுதில் அஃதஃதைச் - செவ்விதில் ஈந்துவரும் என்றுணைபோல் இவ்வுலகில் இஞ்ஞான்று மீந்தவருள் ஒன்றுண்டோ வேறு. இன்பமோ செல்வமோ எஃதுமெற்கு வேண்டாம்நீர் இன்பமுறல் ஒன்றேஎற் கெல்லாம்என் - றன்பமைந்து தன்னயமும் தன்சுகமும் தன்னகையும் நீத்துநிற்கும் என்னவள்போல் பெண்ணுண்டோ இன்று. 2 கடவுளது செய்கையெலாம் கண்டுமகிழ் வுற்றுக் கடவுளது நல்லருளைக் கைக்கொண் - ட்டமுறுமென் றெல்லாம் அளித்துதவும் என்மனைபோல் இந்நாளில் இல்லாளும் மற்றுண்டோ இங்கு.

வாழைப் பழம்கடிக்க மாட்டாத என்பற்கள் ஏழைச் சிறார்கடிக்க ஏலாத - காழுடையாய் சீடை தினல் இந்நாள் சிறுகுடிலுள் நிற்பதொக்கும் மேடையையும் ஏற்காநின் மெய். க முக்கனியின் சாறெடுத்து முந்திரிஏ லம்வாதம் அக்காரம் தேன்பாலோ டட்டூட்டக்-கக்குமென்னா 45