பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு என்னினிய மெய்யளிக்கும் இன்னுயிரின் காத்துதவும் என்னினிய மைத்துனனே இன்றுன்பால்-மன்னியிருந் துன்னுடைய சொற்கொண்டேன் உள்ளுவந்தேன் இன் என்னுடைய தேயம் எனக்கு. [றெய்தும் க சிரஞ்சீவி கோ.அ. இலக்குமணப் பிள்ளைக்கு எழுதிய பாக்கள். இராமருக்குப் பின்சென் றிராப்பகலாக் காத்துத் தராதலமும் வெற்றியுமே தந்து - சராசரத்தின் துன்பறுத்தான் போகொண்டோய் சொன்னவெலாம் என்புமுதல் எல்லாம்இன் றேற்று. [செய்வாயென் க எல்லாரும் கைவிட்டார் ஏந்திழையும் துன்புற்றாள் வல்லாரும் வல்லுநரும் மாநிலத்துச் --செல்லா திவன்பேச் சினியென் றெனையிகழ்ந்தார் என்மெய்த் தவன்பூமி நாதன் தடத்து. கடவுளும் நானிவண் கற்றுள கல்வித் திடனுமே சீருயிரைச் சேர்த்தென்- உடலில் பொருத்தநிற் கின்றேன் பொதிந்தெனை வைத்துப் பொருத்தமாச் சேர்ப்பாய் புவி. பண்டிகை என்று பகர்ந்திடும் இத்தினம் தண்டிகை ஏறுவோய் தந்துளேன் - ஒண்டியேன் கொண்டிவை கண்டுநீ கூறிய செய்தெனை அண்டிநின் றாதரிப் பாய். 50