பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பிக்கு எழுதிய பாக்கள் இலக்குவனே என்னிளையாய் இஞ்ஞான்று நின்னைக் கலக்கியுள தீயசெயல் கண்டேன் - குலக்கண்ணே நம்மவர்க்குத் தீங்கிழைப்பார் நம்மவரே அன்னார்பால் எம்மொழியும் சொல்லாய் இனி. சிரஞ்சீவி வ.உ.மீனாட்சிசுந்தரம்பிள்ளைக் கு எழுதிய பாக்கள். சோதரனே மீனாட்சி சுந்தரனே எற்கரிய ஆதரவா வந்துதித்த அப்பனே - காதலரின் நட்பருமை காட்டற்கு நம் அரணுள் உற்றனையோ கொட்பாணுள் யானுறஉட் கொண்டு. க [ன்னார் இராமன் வனம்புகப்பின் ஏகி அவற் கூறு வராமல் புரந்ததம்பி மான - இராதுவெளி நம்மரணுட் சென்றுதளை நண்ணினையோ உன்னையொ தம்மரணுட் கொள்ளாத தால். 2 மாற்றார் அரணுள் வசித்தாலும் எற்கன்னார் ஆற்றா தெனதுமனத் தாறுற்றுத் - தோற்றார் நமதரணுள் நீவசித்தும் நம்ஏவல் செய்வார் தமதுரையைத் தாங்கலென்னோ சாற்று அண்ணன் பகைவர் அரணுள் அழிவனெனும் எண்ணம் உனதறிவை ஏய்த்ததோ - கண்ணன் பகைவர் அரண்புகுந்து பற்பலமுன் செய்த வகையை மறந்தனையோ மற்று. 51 15