பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பா.சி. அவர்களுக்கு எழுதிய பாக்கள் செய்யறத்தைக் கொண்டார் சிறைப்பட்டு மெய்யறிவால் மெய்யறத்தைச் செய்தான் மிகுந்து. ச அன்னான் சிறையுள் அடைபட்ட ஓர்தீயன் சொன்னான் புவிநின்று தூரத்தே--மன்னாநின் றாயென் றுளம்வாடித் தன்னொற்றால் ஈங்கிருக்கி றாயென் றறிந்தான் நகைத்து. 6 சிறையுள்ளே எண்ணில் சிறைசெய் தன்னானை மறையுள்ளே மெய்ப்பொருளை வைத்தாங் - கறையுள்ளே மூடிநிதம் வைத்துமவன் முன்போல உண்டுணர்ந்து நாடியன செய்கின்றான் நன்கு. வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும் தந்த சிதம்பரமன் தாழ்ந்தின்று - சந்தமில்வெண் பாச்சொல்லிப் பிச்சைக்குப்பாரெல்லாம் ஓடுகிறான் நாச்சொல்லும் தோலும் நலிந்து. 67 அவனுடைய நன்மனைவி யாதியர்கள் இந்நாள் தவனுடைய நல்வேடம் தாங்கிச் - சிவனுடைய நாமமொடு வாழ்கின்றார் நம்கண்ணன் ஊருள்ளே ஏமநிதி ஒன்றும் இலாது. பூமருவக் கண்ட புதுமையெலாம் சொன்னேன்நின் சேம்மொடு நிற்குமரர் சேர்ந்ததமர்- சேமமெலாம் சாற்றிடுவாய் என்னுரியர் தாகமுடன் தீர்க்குநிதி ஆற்றிடுவாய் அன்போ டவர்க்கு. கூ 57