பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ. சுவாமிக்கு எழுதிய பாக்கள் மனையையும் மகாரையும் மகிழ்வொடு கொணர்ந்திவண் நனைகண் சிறப்பொடு நல்கியும் யானுறை வீட்டையும் பொருளையும் வேறுள் அனைத்தையும் நாட்டையும் அரசையும் நலத்தையும் எய்த அசையாது தவத்தில் அமர்ந்திட அருளியும் அசைவினுள் வீழ்ந்தஎன் அன்பார் சகோதரர் பெருந்தவம் இன்றியும் பிறதொழில் இன்றியும் திருந்திய அறத்தொடு சீர்சால் நாடுறும் உரிமையை ஆக்கிட ஊக்கிய நீயோ பெரியவன் உண்மையைப் பேசுதி, சுந்தரன் இனிமைப் பாசில இயற்றிய தவமோ தனிமையும் துயரும் சார்ந்தஎன் தவமோ பெரியது நடுநின்று பேசுதி, அன்னார் அரியவர் என்றீடும் அன்பர்தம் குழுவினே. உலகெலாம் புரக்கும் ஒருதனிக் கடவுளின் நலமெலாம் திரண்டு நற்புவி பிறந்து மறமெலாம் இழுக்கி வண்புகழ் பெருக்கி அறமெலாம் நாட்டி அரசாகி துவர்க்கும் சிறக்க நின்றநல் தெய்வக் கொழுநனால் துறக்கப் பட்டுத் துன்மொழி தொடரத் தனித்துச் சென்ற தையல் சீதையைத் தனித்த வனத்தில் தன்னகத் திருத்தி இரவும் பகலும் இடைவிடா தருகில் 59