பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுவாமிக்கு எழுதிய பாக்கள் தினமும் புரிந்துநம் செல்வம் முழுமையும் கனமுற மேன்மேற் கட்டுவார்த் தடுக்கும் திறத்தினை எமக்குச் சீக்கிரம் தருக அறத்தினை வளர்க்கும் அறிவொடு திரட்டியே. துறப்பன யாவையும் துறந்துள பெரியோய்! துறப்பதும் எளிதெனச் சொல்லவும் துணிந்தேன். துறவாத காரணம் சொல்லெனக் கேட்பின், இறவாத செய்தலே ன்கடன் என்றும் மறத்தினை ஒழித்தே அறத்தினை வளர்க்கவும் திறத்தினோர் மெச்சவே செயற்கரிய செய்யவும் சனகன்பின் னவனெனத் தாரணி நிற்கவும் கனவொன்று கண்டுயான் கருதினேன் அவைசெய. என்னையாள் கடவுள் நீ என்னுடை. சேவகனென் றுன்னிய உண்மையை உவப்பொடு கொண்டேன். வேந்தர் தமது வினைசெய் வாரை ஏந்துவர் சிலநாள் இகழுவர் சிலநாள் அத்துணை யானும் அருளொடு நிற்கையில் எத்துணை உயரமும் ஏத்துவேன் வருந்தேல். என்னுடை நிலைமை இக்கா லத்தும் மன்னர்மன் னற்கும் வானுளார் எவர்க்கும் மிகமிக மேலென விருப்பொடு கொண்டுளேன் தகவொடு யானே; சத்தியம் இஃதே. 61