பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு பொன்னினும் என்னினும் பொதிந்துயான் வைத்துள மன்னினும் பொன்னினும் மதிப்புயர் நாயக! நிகழும் திங்களில் கேரீர் ஆறினில் புகழும் அரசும் பொருத்துமநின் கடிதம்என் கரத்தினில் இருக்கக் கனவொன்று கண்டிங் குரத்தினில் உறையும்யான் உவந்ததென் சொல்வேன்! மனையின் வாழ்க்கையை மதியாது துறந்துள நினைஎன் மனையில் நின்றிடச் செய்ததும் தேயஅர சாட்சியைத் திருத்தநிற் பேனை நேயநின் துறவினில் நின்றிடச் செய்ததும் விதியென மொழிந்ததை விருப்பொடு கொண்டேன்; விதியினை நொந்ததை மிகையெனத் தள்ளினேன். மைத்துனர் தம்மை மதித்திலர் எனமிகக் கைத்தென தருமைக் கண்கள் வருந்தநீ 66 ந்தது தகுதியோ பெருங்குடி செயும்எனைப் பரித்து காத்தலின் பண்பிதோ வள்ளுவன் குடிசெய் வார்க்கிலை (கூறிய) பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்" என மொழிந்ததைக் கண்டு முதுக்குறை கொண்டு கழிந்த செயலெனக் கனவென மறப்பாய். மதியிலாச் சிலரொடு வழக்கிட நேர்ந்தநின் விதியினை நொந்தனை ; விரிந்த உயர்ந்தநம் தேயம் முழுவதும் சிறுமதிப் பட்டின்று மாய ஆட்சியில் மயங்கியுள தன்றோ? நின்கடன் அதற்கறிவு நித்தமும் ஊட்டலே; 62