பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ. சுவாமிக்கு எழுதிய பாக்கள் என்கடன் அதனையாள் இறையினைத் திருத்தலே; அக்கடன் கொண்டநாம் அறிவிலார் செயல்களை மிக்கபுன் னகையொடு விடுத்தலே முறைமை. சாமமுதல் நான்கையும் சாற்றிய நீயதை ஏமநம் காரியத் தியற்றிடா துழந்தனை; இன்பம் ஒன்றிலே இடைவிடா தமர்ந்தநீ துன்பம் உற்றதாச் சொல்லவும் துணிந்தனை; மெய்ப்பொருள் மாமலை மேலிருந் தாளும் நீ பொய்ப்பொருட் செலவினைப் புகன்றுமிக வாடினை; சென்னையில் மக்களொடு சிறப்புற வாழென முன்னம் இயம்பினேன், மொழிந்துசில மறுத்தனை; திருமந் திரநகர் சேர்ந்துநம் முந்திய கருமம் தொலையெனக் கழறினேன், அஞ்சினை ; முத்தூர் நிற்பதா மொழிந்தனை, அஃதெனைக் குத்துமே என்றுயான் கூறினேன் வருந்தி ; ஆழ்வார் நகரியே அமைந்ததென் றனை அன்பில் ஆழ்வாள் அதனையும் அகம்கொனச் செய்தேன்; மைத்துனர்க் கெழுதென மனத்தொடு கூறினை, கைத்தவர் நிற்பது கண்டும்பான் எழுதினேன்; அவணுற்று மக்களை அயலுற விட்டு நீ செவணுறச் சென்னை செல்வதா எழுதினை, எத்துயர் வரினும் ஏற்கலாம் என்றுயான் முத்தூர் நில்லென மொழிந்தேன் பன்முறை; உரையெலாம் கொளாதும் உரையாதும் ஓடினை; புரையிலேன் மீதே புகன்றனை புரையின்று. 63