பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசுச் செயல்கள் கடவுளெலாம் செய்வதென்றால் கல்லையொப்பர் மாந்தர் அடமு ளதோ நீதியெனற் காங்குத் - திடமுடைய மாந்தருளும் இல்லாத மாந்தருளும் அன்றோமன் ஈந்தருளும் நீதி இவண். சு சுதந்தரமில் பொம்மைகட்குத் துன்பின்பு பார்த்து நிதந்தரலோ மன்னனதோ நீதி - இதம் புரிய வேண்டும் எலாமளித்தும் வேறுவினை செய்வார்க்கே யாண்டும் அளிப்பர் அஞர். எ பொம்மைகளை ஆள்சேயும்பொன்பூட்டிச் சோறூட்டிச் செம்மைகளைச் செய்வதலால் செய்யாதே-வெம்மைகளை ஞானமிலாச் சேயினுமென் ஞானஉருக்கொண்டஐபன் ஈனமுளான் என்பாயோ இன்று. அ ஆதிஞா னத்திற்கும் ஆன்மஞா னத்திற்கும் நீதிஞா னத்திற்கும் நீள் உலகில் - ஆதிமுதல் பேர்பெற்ற நம்மொழியின் பேரறிஞர் நூல்களைப்போல் சீர்பெற்ற நூல்களுண்டோ செப்பு. கூ அவ்வரிய நூலிகழ்ந்தோ ஆங்கில நூல் உட்கொண்டோ தெவ்வெனுமோர் கீர்த்திபெறச் சிந்தித்தோ- இவ்வுரை

[கள் நான்பகர வேண்டுமென்றோ ஞானமெலாம்?நீமறந்தாய் ஒன்பகர்க செய்தாய் இது. 67