பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு மாதுக்கு எழுதிய பா. அப்பனே ! உன்னெழுத் தன்பொடு கண்டேன். செப்பிய ஒன்றனைத் தெளிவறச் செப்பினாய். என்னெனக் கேட்பின், ஏழையேன் சரிதத்தை இன்னமும் தந்துளேன் என்றுநீ இயம்பிலை. அம்மொழி தந்தபின் அளிப்பேன் உனதுமற் றெம்மொழி தனக்கும் ஈறிலா விடையே. F சிரஞ்சீவி கோ. அ. இ. பெயரால் தம்மீது கருணை கொண்டுள்ள ஒருமாதுக்கு அனுப்பிய பா. பத்தியில் பிறந்து பணிபல செய்துமுன் சித்தம் பரத்தைத் தெரிசித்த நல்லாருள் மானம் மிகுந்த மாதர்க் கரசியே! யானிவண் சிலசொல் அறைகிறேன் நம்புவித் தாமமார் அண்ணா சாற்றிய படிக்கே. சேமம் யாவரும்: சேமம் எழுதுக. சென்ற திங்களில் திருமந் திரநகர் நின்றுநின் தங்கையும் நேயமார் மக்களும் வள்ளிநா யகமெனும் மாதவரும் வந்தனர். தெள்ளிய நமது சிதம்பர அரசரைப் பார்த்திடக் கருதியான் பகர்ந்தநால் வரையும் சேர்த்துக் கொண்டவர் சிறையுளே சென்றவண் அருந்தவம் இழைக்கும் அண்ணலைக் கண்டேன். பெருந்தவ மகிமை பேசவொண் ணாதது! தரையினுக் கரசர் தவத்திற் கரசராய் உரையில் மிகுந்தும் நிறையில் குறைந்தும் 73