பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்யறம். சித்து வரும் நமது பாரதமாதா மேன்மையடைய வேண்டு மாயின் நமது ஜனங்கள் நினைந்தபடியுடல் வளைந்திட வளர் க்க வேண்மென்றோ ? * * * அரசியல் அதிகாரங்கள் அனைத் தும் இராஜாங்க வியவகாரங்களில் மனத்தைச் செலுத்துகின்ற ஒவ்வொருவரும் மனனம் பண்ணத் தக்கது. * * * அரசியல் அதிகாரங்கள் படிக்கப்படிக்க ஆநந்தத்தைத் தருகின்றது ; அறிவைப் பெருக்குகின்றது. அந்தணவியலில் அந்தணரி யல்பு கூறுமிடத்து " தாசர்நல் லுயிரெலா மளிக்குந் திறத் தினர், அனைத்துயிர் தம்மையு மளரிப்பவ ரந்தணர் '" என் னும் சூத்திரங்களால் அரசரது தருமத்திற்கும் அந்தணரது தருமத்திற்கு முள்ள வேற்றுமை யெடுத்துக் காட்டப்பட்டிரு க்கிறது. * இங்ஙனமே நாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்து செல்வோ மாயின் விரியுமென் றஞ்சி நமது அபிப்பிராயத்தை முடிக்கின்றோம். இந்நூல் மிகச் சிறந்தது ; அனைவராலும் படிக்கப்பட வேண்டியது. கலாசாலைகளில் இந்நூல் மாணவர் களுக்கு ஒரு பாடப்புத்தகமாக வைக்கப்படுதல் நன்று."ஞானபாது, திருமயிலை, சென்னை. " மெய்யறம் என்னும் இந் நூலும் நமது தேசபக்த சிரேஷ்டரான ஸ்ரீமார். வ. உ. சிதம்பரம் பிள்ளை யவர்க பரால் இயற்றப்பட்டதே யாம். இது முற்காலத்திலிருந்த வள்ளுவரும், ஔவை நாச்சியாரும் இயற்றிய நூல்களுக் கொப்ப அறம், பொருள், இன்பம், வீடு என்னும் எல்லாவற் றையும் ஒருங்கே போதிக்கும் நீதி நூலாகும். அவ்விருவர் காலத்திற்குப் பின்னர் இது காலம்வரை இப்படிப்பட்ட திட் பநுட்பமான நூல் எவராலும் இயற்றப்பட்டிருப்பதாக நாம் அறியோம். இதைச் சிறுவர் முதல் வித்துவான்கள் இறுதி யாக யாவரும் கைக்கொண்டு வாசித்துப் பயன் அடைதல் பொருந்தும் என்போம் நாம்."--விவேகபாறு, டர்பன், தென் ஆபிரிக்கா. ' ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம் பிள்ளை யவர்களால் ஏற்கன வே வெளியிடப்பட்டுள்ள மனம்போல வாழ்வு,"" " அகமே புறம் என்னும் இரண்டு நூல்களையும் வாங்கிப்படித்து உருசி கண்டவர்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது அச்சிடப்பட் டிருக்கும் மெய்யறம்' என்னும் இந்த நூலையும் இகளி அச்சிடப்படும் மற்ற நால்களையம் - வலுடன் எதிர்பார்த்