பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு உய இரவிமர புதித்த இராகவன் தானென உரனொடும் ஒளியொடும் உவப்பொடும் விளங்கினர். நாயகரை வணங்கினர்: நாயகர் வாழ்த்தினர். சேயென வருந்திய சிறியேன் வணங்கினேன்: கடவுள் அருளுவார் கலங்கற்க என்றனர். இடபுறம் அரங்கில்நின் றிறங்கிய குலநன் மகளைப் பார்த்து வாழ்க என்று தம் மகாரை எடுத்து மார்போ டணைத்து, முகத்தொடு முகம்வைத்து முத்தினர் முகர்ந்தனர். அகத்தின் நிலைமையை அறிபவர் யாவர்! மக்கள் தம் இனிய மழலைச்சொற் கேட்டிடத் தக்க மொழிசில சாற்றி அவர்தம் அருமைச் சொற்களைப் பெருமையொடு கொண்டெமை இருமென மொழிந்தவர் இருந்தனர் தரைமிசை. கூய மக்கள் அவருபர் மடிமிசை இருந்தனர். பக்கம்நின் றொருவன் பண்டம் சிலவும், உடுப்பன சிலவும், படிப்பன இரண்டும் கொடுப்பக் கொண்டினம் கோக்கட் களித்தனர். நாயக ரிடத்துமிது நவிலுவே னிடத்தும் நாயகி யிடத்தும் நலங்களை வினாவினர். காரியம் யாவையும் கழறுக என்றனர். ஆரிய மக்களுள் அறிவினில் சிறந்தநம் வள்ளிதா யகர்தம் வலனொடும் உரனொடும் பிள்ளைவீட் டில்போல் பேசத் தொடங்கினர்; மெதுவாப் பேசிட வேண்டினர் அண்ணல். 74