பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு மாதுக்கு எழுதிய பா. கதையை விரித்துக் கழறினர் நாயகர் : குறித்தமணி நேரம் குறுகநம் இறைவர் செறித்தான் மொழியால் சிலசில சொல்லிக் கதையை முடித்தனர்; கண்களை முத்தினர்: கதையினைக் கேட்டும் கணவரைப் பார்த்தும் அரங்குளே மறைவில் அந்தப் புரத்தில் இருந்தகின் தங்கைபால் வகினர் தலைவர். வன்னஅங் கியம்பினர் என்றுயான் அறியேன். மன்னரும் அரசியும் மகிழ்ந்துவெளி வந்தனர். பின்னரும் தம்மினம் பெரியநன் மகனை மன்னுற முத்தினர், வாங்கினேன் அவனை இளையநன் மகனையும் எடுத்துமிக முத்தி இணையான் தன்கரத் தீந்தனர் பின்பு. கடவுளை நினைத்துக் கையெடுத்துத் தொழுதுதம் திடமுல அகத்தொடும் சிரித்தமலர் முகத்தொடும். எங்களை அனுப்பினர். ஏழையேம் பிரிந்தேர். திங்கள் முடிவுறத் திருமந் திரநகர் சென்றனர் நால்வரும். சிறியேன் அதன்பின் இன்றுநிற் கெழுதிட எண்ணினேன் எழுதினேன். கூய இன்றிவண் நிகழ்தல்போல் என்முன் தோற்றுறும் அன்றவண் நிகழ்ந்ததொன் முறைவேன் நினக்குயான். நாயகர் கதையினை நடாத்திய மத்தியில் தாயென நின்னைத் தம்முளம் கருதா தேதோ ஒருசொல் இயம்பினர். அரசர் ஏதோ பதிலளித் தேனையர் யாவர் 75