பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு அவளளவு நன்றி யளித்துளார் என்றனர். அவருள் நன்றியும் அன்பும்யான் கண்டேன் பின்னொரு தரம்நினைப் பேசினர் அண்ணா. என்னவன் றியம்புவேன் இளமையை மறந்திடின் எய தாயென வைத்தவன் தாளிணை தொழுதிடும் நேயமும் கொண்டுவேன் நெஞ்சினுள் என்றார். நிகழ்ந்தன யாவும் நிகழ்ந்தபடி கூறினேன். மகிழ்ந்துநீ என்றும் மயங்கா திருப்பாய்; திருமந் திரநகர் சீக்கிரம் செல்வாய். கருமம் சிலசெயக் கருதியவண் நிற்கும் நின்னுயர் வறியா கெஞ்சுகொள் மாக்கள் நின்னிடம் சொல்வதை நினைப்பொடு கேட்டுக் காரியம் செய்வாய் கருத்துட னென்று பாரத நண்பர் பகர்ந்தனர் தினக்கே. அய ஸ்ரீ.சு. ஞானசிகாமணி முதலியாரவர்களுக்கு எழுதிய பாக்கள். ஞான சிகாமணி நண்ப நினதுபிதா வானம் புகாமுன்பென் வாக்களித்தேன் மோனம் புரிந்தனை தீயோ புனிதநட் புற்றுப் பிரிந்தனை நீதியோ பேசு. 85 ஞான சிகாமணி நண்ப மிகஇனிமை யான குணங்கள் அமைந்துள்ள - நானம் காழும் கதுப்பினாட் கைக்கொண்டாங் கென்றும் தமருடன் வாழ்க தளிர்த்து. 76 2.