பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு அன்புடைய மைத்துனனே யானின்று வீடெய்தி இன்பமொடு வாழ்வேனென் றெண்ணிநனி - நின்பதங் நாடோறும் ஈங்கு நடந்து சலித்தனவே வீடுதரு மோஇன்று மெய். [கள் P என்னுயிருக் கின்னுயிரா எய்தியுள என் துணையே என்னுடைய நல்வரவை எண்ணி இன்று-நின்னுடைய கண்ணும் உளமுமெனைக் காண அலா உற்றனவோ நண்ணுவனோ நின்னை இன்று நான்.

என்னருமை நாட்டை மெர்க்கிய வந்துள்ள என்னருமைப் புத்திரரே இன்றுமுதல் - நும்மருமை மெய்தழுவிச் சொற்கேட்டு மேன்மேலும் இன்பமுற மெய்தருமோ இன்றெனக்கு வீடு. Fr என்னரிய பாரதமே இன்றுவரு வேனென்று நின்னரிய மக்களொடு நீசூழ்ந்து - பன்னரிய வந்தனங்கள் செய்துவெற்றி மாலையிட உன்னினையோ தந்திடுமோ மெய்வீடு தான். எ சீரடைய உன்னுகின்ற சீனமே நின்னால்யான் சீரடைய லாமென்று சிந்தித்தேன்--சீரடைய யானின்பால் வந்தடைதல் இன்றியமை யாததுமெய்க் கோனின்பாற் சேர்ப்பானோ கூறு. 21 82