பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏர்த் தொழிலும்-விவசாயமும், கைத் தொழிலும் பல கைத் தொழில்களும், எங்கும் பெருகிவரப் பார்த்து - எவ்விடத்திலும் நாளுக்கு நாள் விர்த்தியாகிக் கொண்டு வருமாறு ஏற்பாடு செய்து, எ ழிலும் காப்பும் படை தலனும் சேர்த்து- அழகும் மதிற்காப்பும் படைக்காப்பும் சேர்த்து, நகர் அரண் கல்விச்சாலை நல் சமயக் கோவில் - நகர்களையும் கோட்டைகளையும் கலாசாலைகளையும் நல்ல மத ஆலயங்களையும், நிகர் அற நினைத்து ஆக்கு - ஒப்பு இல்லாதவாறு நினைத்துக் கட்டு ளிப்பாயாக. க-ரை:--பல இடங்களிலும் விவசாயமும் கைத் தொழில்களும் விர்த்தியாகுமாறு செய்து, நகரங்க ளையும் அரண்களையும் கலாசாலைகளையும் நல்ல மத ஆலயங்களையும் அழகோடும் மதிற்காப்போடும் படைக்காப்போடும் சேர்த்து அமைப்பாயாக. ஆங்கு அசை. எவ்வுயிருந் தன்னிலையி லின்பமொடு வாழ்ந்திடவு மெவ்வுயிருந் தன்னிலைவிட் டேகியய-லெவ்வுயிர்க்கு மின்னலிழை யா துறவு மேற்றமுள மாந்தரெலாந் தன்னிலையி னிற்கவும்பார் தாங்கு.. .. அ-ம்:- செய்யுள் நடையே அதுனன் நடை.. .. ப-ரை: -எவ் உயிரும்-ஒவ்வோர் உயிரும், தன் நிலையில்-தன் தன் இடத்தில், இன்பமொடு வாழ்ந். ..................