பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

விதியில் அறிதல். 15 அ-ம்:--- அவரது உரையின் உட்பொருளை ஆதி முன்பு சொல்வேன்; அது தவறு எனக்கூறுபவர் தாழ்வர். புவியில் விதைத்த விதை எஃதோ அஃ தேமேல் விளையும். (அதுபோல்) விதைத்த வினை எஃ தோ அஃதே மேல் சாரும்.

ப-ரை:- அவர் உரையின் - அவ்வான்றோரது வாக்கின், உட்பொருளை-உட்கருத்தை, ஆதிமுன்பhjhவுள் முன். சொல்வேன் - கூறுவேன். தவறு என-அது தப்பு என்று, கூறுபவர் - சொல்லுபவர், தாழ்வர் - தாழ்வையடைவர். புவியில் - பூமியில், விதைத்தவிதை எஃது-இட்டவித்து எஃதோ, அஃ தே மேல் விளையும்-அவ்வித்தே பின்னர் விளையும்; (அதுபோல) விதைத்தவினை எஃது-செய்த கருமம் எஃதோ, அஃதே மேல் சாரும்-அக்கருமமே விளைந்து வந்து பொருந்தும்.

க-ரை.-விதைத்த வித்துக்களே விளைந்து பலன் களாக வருவதுபோலச் செய்த கருமங்களே விளைந்து இன்பதுன்பங்களாக வந்து பொருந்தும்.

வேலவிதை மாங்கனியை மேவச்செய் யாதது போற் பாவவினை யின்பத்தைப்பார்க்கவிடா-தாவிங் கெருக்கிலையின் பாலீயா தீயாது துன்பம் பெருக்கநல்கு நல்வினை தான் பின்.(கசு)

அ-ம் :- இங்கு வேலவிதை மாங்கனியை மேவச் செய்யாது : அதுபோல், பாவவினை இன்பத்தைப் பார்க்கவிடாது. ஆ எருக்கலையின் பால ஈயாது: அது போல், பெருக்கத்தை நல்கும் நல்வினை பின் துன் பத்தை ஈயாது.