பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

மெய்யறிவு. இவண் என்றும் இவ்வுலகத்தில் எக்காலத்திலும், இன்பம் உற இச்சித்தால் - இன்பங்களை அநுபவிக்க (8) விரும்பினால், என்று தரும் - இன்பங்களைக் கொடுக்காகின்ற, நல்வினையை - புண்ணிய வினைகளை, இன்று முதல்-இக்கணம் முதலாக, நாடுவிரும்பிச் செய். க-ரை:- இன்று பாவவினைகளைச் செய்கின்ற மனிதர் என்றும் கொடிய துன்பங்களை அநுபவிப்பர். என்றும் இன்பங்களை அநுபவிக்க நீ விரும்பினால், நீ இக்கணம் முதலாகவே புண்ணிய வினைகளைச் செய்யத் தொடங்கு. 3-ம் அதி.---உடம்பை வளர்த்தல்.மன்னுரிந்தப் பூவுலகின் மாண்புற்ற பல்பொருளு என்னுடம்பிற் கொப்பிலையா லூக்கியதைப்-பன்னும் பிணியெஃதுஞ் சாராது பேணிவளர்த் தென்றும் பணியுமா முன்வாய் பரிந்து. (உக) அ-ம் :- உன் உடம்பிற்கு மன்னும் இந்தப் பூவுலகில் மாண்பு உற்ற பல்பொருளுள் ஒப்பு இல்லை. (ஆதலால்) பன்னும் பிணி எஃதும் அதைச் சாராது ஊக்கிப் பரிந்து பேணி வளர்த்து (அஃது) என்றும் பணியுமாறு (அதனை) ஆள்வாய். ப-ரை :-உன் உடம்பிற்கு உனது சரீரத்திற்கு,மன்னும் இந்தப் பூவுலகில் நிலைபெற்றிருக்க, நின்ற இப்புவியுலகத்தில், மாண்பு உற்ற பெருமை பெற்து, பல் பொருளுள் பல பொருள்களுள், ஓப்பு இல்லை