பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________ உடம்பை வளர்த்தல்.

வுலகத்தில் பிறக்கின்ற, காலத்தால்-தீரிதாஷ்ண நிலைகளாலும், மண்ணின் இயல்பால் - நிலத்தின் தன்மையாலும், சொன்ன அவை மூன்றும் - மேற் சொல்லிய வாயு,தேயு, அப்பு என்னும் மூன்றும், சமமாகும்- அதனதன் அளவில் நிற்கும்; (அல்லது) இரண்டொன்று-அம்மூன்றில் இரண்டேனும் ஒன் றேனும், முற்பட்டுத் தோன்றும் -மேற்பட்டு நிற்கும். தொடர்ந்து - சரீரத்தைப் பற்றிநின்று, அதைக் காண்-(அம் மூன்றும் நிற்கின்ற) நிலைகளை அறிவாயாக.

க-ரை :- தாய் தந்தையரது சரீரநிலைமைகளையும், ஜனனகாலத்தின் நிலைமையையும், ஜனன நிலத்தின் நிலைமையையும் அது சரித்துச் சரீரத்தில் வாதம் (வாயு), பித்தம் (தேயு), சிலேற்பனம் (நீர்) இம் மூன்றும் தன் தன் நிலையில் நிற்கும்; அல்லது ஒன்று இண்டு அதிகப்பட்டு நிற்கும். அதனை நீ அறி, வெய்யனவுத் தண்ணியவும் வேண்டுங்காண் வாதவுடல் வெய்யனவே தண்ணுடலம் வேண்டுங்காண்-வெய்யவுடல் தண்ணியவே வேண்டுங்காண் சார்த் தறிவா யுன்னுடம்பை நண்ணியுள நீர்மைகளை நன்கு.

அ-ம் :-வாத உடல் வெய்யனவற்றையும் தண்ணியவற்றையும் வேண்டும்; தண்உடலம் வெய் யனவற்றையே வேண்டும்; வெய்யவுடல் தண்ணிய வற்றையே வேண்டும். உன் உடம்பைச் சார்ந்து நண்கனியுள்ள நீர்மைகளை நன்கு அறிவாய்.

ப-ரை:- வாத உடல்-வாதம் மிகுந்துள்ள சரீ சம், வெய்யனவும்-உஷ்ண பதார்த்தங்களையும்,