பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

மெய்யறிவு. சமைத்த உணவை உண்டு, பின்னர்ப் பொருள் வரு வாய்க்குரிய தொழில்களைச் செய். பிரிநிலை ஒகாரங்கள் தொக்கன. பிரிநிலை ஏகாரங்கள் உதயத்தையும், வீசுதல் முதலியவற்றையும், விலக்கிநின்றன. மதியம் வருமுன்னர் வாழ்நீர் குளித்துப் புதியகறி நெய்தயிர்நெற் பொங்கல்- பசியளவிற் குண்டிருந்து வெற்றிலைப்பாக் கூறுநீர் மூன்றருந் திக் கண்டிருப்பாய் வேலைகளை. அ-ம் :-- மதியம் வரும் முன்னர் வாழ் நீரில் குளித்து, புதிய நெய்யோடும் கறியோடும் தயிரோ டும் நெல் பொங்கலைப் பசியளவிற்கு உண்டு, இருந்து, வெற்றிலைப் பாக்கில் ஊறு நீரில் மூன்றை அருந்தி, வேலைகளைக் கண்டிருப்பாய். ப-ரை :- மதியம் வரும் முன்னர் பகல் பதினைந்து நாழிகை வருவதற்குமுன், வாழ் நீர் குளித்து-குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானம் செய்து, புதிய நெய் கறி தயிரோடும்-அப் பொழுது சித்தப்படுத்தப் பட்டநெய்யோடும் கறியோடும் தயிரோடும், நெல் பொங்கல் - அப்பொழுது ஆக்கப்பட்ட பச்சரிசிச் சாதத்தை, பசி அளவிற்கு-பசி நீங்கத்தக்க அளவு வரை, உண்டு - சாப்பிட்டு, இருந்து - (ஒரு சௌகரியமான இடத்தில்) அமர்ந்து, வெற்றிலைப் பாக்கு ஊறு நீர்-வெற்றிலை பாக்கு முதலியவற்றை வாயி லிட்டு அதில் ஊறுகின்ற நீரில், மூன்று அருந்தி -