பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உ............டம்பை வளர்த்தல் 31 வமனநசி யம்பேதி மன்னாறீர் க நான்காய் அமர்மதியி லஞ்சன நெய் சௌள-மமரிரண்டு மூன்றெட்டு நாளிற்கொன் முந்துமல நீர்கழிக்கத் தோன்றுபகற் றுஞ்சலிராத் துஞ்சு. (௩௰)

அ-ம்:-வமனத்தையும் நசியத்தையும் பேதியையும் ஆறு, இரண்டு, நான்காய் அமர் மதியில் கொள்;அஞ்சனத்தையும், நெய்யையும், சௌளத்தையும் அமர் இரண்டு, மூன்று, எட்டு நாளில் கொள்; மலத்தையும் நீரையும் கழிக்க முந்து; தோன்று பகலில் துஞ்சல்; இராவில் துஞ்சு.

ப-ரை:-வமனம் நசியம் பேதி - வாந்தியை உண் பெண்ணும் மருந்தையும் செவிநோய் மூக்குநோய் உண்டாகாமல் தடுப்பதற்காக அவற்றில் வார்க்கப்படும் மருந்துகளையும் பேதியை உண்டுபண்ணும் மருந்தையும், ஆறு, இரண்டு, நான்காய் அமர் மதியில் கொள்- (முறையே) ஆறு,இரண்டு நாள் காய்ப்பொருந்தி வருகிற மாதங்களில் கொள்வாயாக; அஞ்சனம் நெய் சௌளம்-கண்நோய் உண்டாகாது தடுத்தற்காக அதில் இடும் மருந்தையும் எண்ணெய் முழுக்கையும் சௌளத்தையும், அமர் இரண்டு மூன்று எட்டு நாளில் கொள்-(முறையே) நிலையாகவரும் இரண்டு மூன்று எட்டு நாள்களில் கொள்வாயாக; மலம் நீர் கழிக்க முந்து -மலத்தையும் ஜலத்தையும் கழிக்கவேண்டிய நேரங்களில் தாமதம் செய்யாது கழிப்பாயாக; தோன்று பகல் பல உயிர்கள் இயங்குகின்ற பகல் காலத்