பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தடித்த எழுத்துக்கள் மனத்தை யாளுதல். 37 க-ரைfdfஉனது மனம் நினைக்கும் விஷயங்களை ஆராய்ந்து, அவற்றில் இன்ன இன்னவை ஆக்கத்தைக் கொடுக்கும், இன்ன இன்னவை கேட்டைக் கொடுக்கும் என்று உனது மனத்திற்குச் சொல்.

உன்னுரையைக் கேளா துளம்பின்னுந் தீயன்றின் சொன்னபொறியைந்தனையுந் தொல்லுலகின்-மன்னு மறப்பொருள்கள் சேராத மார்க்கத்திற் சென்மெய்த் திறப்பொருளை யென்றுஞ்சிந் தித்து.(௩௬)

அ-ம்:- உளம் உன் உரையைக் கேளாது பின்னும் தீயவற்றை உறின், (நீ) என்றும் மெய்த்திறப் பொருளைச் சிந்தித்து, தொல் உலகில் மன்னும் மற்றப் பொருள்கள் சொன்ன பொறி ஐந்தனையும் சேராத மார்க்கத்தில் செல்.

ப-ரை:-உளம்-மனமானது, உடன் உரையைக் கேளாது- நீ சொல்லியவற்றைக் கொள்ளாது, பின்னும் தீய உறின் - பின்னரும் தீய விஷயங்களைப் பற்று மாயின், என்றும் மெய்த்திறப் பொருளை - (நீ) எப்பொழுதும் உண்மையானவலியுள்ள (பாம்)பொருளை, சிந்தித்து தியானித்து, தொல் உலகில் மன்னும் பழமையான உலகத்தில் பொருந்தி நிற்காதின்ற, மறப்பொருள்கள் - பாவ நிமித்தங்களாகிய பொருள்கள், சொன்ன பொறி ஐந்தனையும் முன் சொல்லிய மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்தையும், சேராத மார்க்கத்தில் செல் -பொருந்தாத வழியில் செல்.