பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

மெய்யறிவு, க-ரை :--இன்ன பொருள்களைப் பற்றினால் துன் பங்கள் வந்து சேரு மென்று நீ சொல்லியதை உனது மனமானது கேளாமல் திரும்பவும் அப்பொருள்களில் செல்லுமாயின்,உனது பொறிகளை அப்பொருள்கள் சேர முடியாத மார்க்கத்திற் செல். உளஞ்செறியு மைம்பொறியு மொன்றியுள மெய்யை வளஞ்செய்யு மூணெல்லா மாற்றி-யிளஞ்சிறுவ ருண்பவற்றைக் கொண்டு முன ரூண்டவள வின்முக்கால் ஈண்பகலி அண்குளித்து நன்கு. (கூஎ ) அ-ம்:-உளம் செறியும் ஐம்பொறியும் ஒன்றியுள மெய்யை வளம் செய்யும் ஊனை எல்லாம் மாற்றி, நண்பகலில் நன்கு குளித்து, இளம் சிறுவர் உண்பவற்றைக் கொண்டு, (நீ) முன்னர் உண்ட அளவில் முக்கால் உண். ப-ரை :--உளம்-மனமானது, செறியும் பற்றும், ஐம் பொறியும்-ஐந்து ஞானேந்திரியங்களும், ஒன்றியுௗ - பொருந்தியுள்ள, மெய்யை - உடம்பை, வளம் செய்யும் கொழுக்கச்செய்யும், ஊண் எல்லாம்-(நெய், கோதுமை, பச்சரிசி, உழுந்து முதலியவை சம்பந்தித்த) உணவுகளை யெல்லாம், மாற்றி நீக்கி, நண்பகலில் பகல் பத்து நாழிகைக்கு மேல் இருபது நாழி கைக்குள், நன்கு குளித்து-நன்றாக ஸ்நானம் செய்து, இளம் சிறுவர்-குழந்தைகள், உண்பவற்றை உண்ணும் (புழுங்கலரிசி, பச்சைப்பயறு, பால் முதலியவை சம்பந்தித்த) உணவுகளை, கொண்டு - (தெரிந்து) கொண்டு, முனர் உண்ட அளவில் (நீ) முன்பு உண்டு