பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

பனத்தை யாளுதல். கொண்டிருந்த அளவில், முக்கால் உண் - முக்கால் பாகம் சாப்பிடு. க-ரை:-உனது உடம்பைக் கொழுக்கச் செய்யும் உணவுகள் இன்ன வென்று தெரிந்து, அவற்றை நீக்கி, உனது உடம்பைக் கொழுக்கச் செய்யாத உணவுகளைத் தெரிந்து, முன் நீ சாப்பிட்ட அளவில் முக்கால் பாகம் பகல் ஒரு போது மாத்திரம் உண். இரவுநடுச் சாமத்தி லெஞ்ஞான் றுந் தூங்கு பரவுபிற நோமெலாம் பார் நூல்-கரவி லுன துமனம் வேண்டுமென வுன்னுகின்ற தீய வுன துபொறி யைச்சேரா தோடு. (ந.அ ) அ-ம் :- எஞ்ஞான் றும் இரவு நடுச்சாமத்தில் தூங்கு ; பாவு பிற நேரத்தில் எல்லாம் நூலைப் பார்; உனது மனம் கரவில் வேண்டுமென உன்னுகின்ற தீய உனது பொறியைச் சேராது ஓடு. ப-ரை:- எஞ்ஞான் றும் - ஒவ்வொரு நாளும், இரவு நடுச்சாமத்தில்-இராத்திரியில் பத்து நாழிகை முதல் இருபது நாழிகைவரை, 'தூங்கு - நித்திரை செய்; பரவு பிற நேரம் எல்லாம்-பரவுகின்ற மற்றை ய சாமங்களிலெல்லாம், நூல் பார் - அறநூல்களை ஆராய்ச்சி செய்; உனது மனம் - உன்னுடைய மன மானது, காலில் - பிறர் அறியாமல், வேண்டுமென-கொள்ளவேண்டுமென் று, உன்னுகின்ற - கருது கின்ற, தீய-கெட்ட பொருள்கள், உனது பொறியை - உன்னுடைய ஞானேத்திரியங்களை, சோரது-கெருங்