பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

40 மெய்யறிவு காதவாறு. ஒடு- அப்பொருள்கள் உள்ள இடங்களை விட்டு) விரைந்து நீங்கு. க-ரை:- ஒவ்வொரு நாளும் இராத்திரியில் பத்து நாழிகை முதல் இருபது நாழிகைவரை உறங்கு ; மற்றைய நேரமெல்லாம் அறநூல்களை ஆராய்ச்சி செய்; உனது மனமானது பிறருக்குத் தெரியாமல் கொள்ளவேண்டுமென் று கருதுகிற கெட்டபொருள்கள் உனது ஞானேந்திரியங்களை நெருங்காதபடி நீ அவை யுள்ள இடங்களை விட்டு விரைந்து நீங்கு வனத்தை யடைந்தங்கண் வாழ்தனித்து நன்குன் மனத்தை வசப்படுத்து மட்டுந்--தனத்தை நிலத்தை மகளிரை நெஞ்சத்துட் கொள்ளா வலத்தை யணைந்து மகிழ்ந்து. (கூசு) அ-ம் - (நீ) வனத்தை அடைந்து, உன் மனத் தை நன்கு வசப்படுத்தும் மட்டும் தனத்தையும் நிலத்தையும் மகளிரையும் நெஞ்சத்துள் கொள்ளாத வலத்தை அணைத்து மகீழ்ந்து, அங்கண் தனித்து வாழ். ப-ரை:--வனத்தை அடைந்து - நன்மரங்கள் அடர்ந்த ஒரு காட்டிற்குச் சென்று, உன் மனத்தை-உனது நினைப்பை, நன்கு வசப்படுத்தும் மட்டும்-நன் றுக அடக்கியாளும் காலம் வரை, தனத்தை நிலத்தை மகளிரை-பொன் முதலிய வற்றையும் வீடு முதலிய வற்றையும் மனைவி முதலியவர்களையும், நெஞ்சத் துள் கொள்ளா - (உனது) நினைப்பில் கொள்ளாத,