பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

- தன்னிலையில் நிற்றல். ஓதும் நெறி-வேதங்கள் கூறுகின்ற மார்க்கத்தை, உவந்து சொல்வேன் - மகிழ்ந்து (உனக்குக்) கூறுவேன். க-ரை :-- தன்நிலை தவறி நிற்றல் இழிந்த நிலையில் நிற்றலாமென்று நல்ல ஒழுக்கத்தவர் கூறுகின்றனர். ஆதலால், நீ உனது நிலையை அடையுமாறு வேதங்கள் கூறுகின்ற மார்க்கத்தை உனக்குக் கூறுவேன். உன்னியல்பை முன்ன ருரைத்துள்ளே னன்முக வுன்னியதை மேன்மேலு மூக்கமுட-னுன்னியல்பை நீயென்றுங் கைக்கொண்டு நிற்பாயே னீமெய்யின் சேயென்று காண்பாய் சிறந்து. (ச2) அ-ம் :-- உன் இயல்பை முன்னர் உரைத்துள்ளேன். (நீ) அதனை நன்றாக மேல்மேலும் ஊக்கத்துடன் உன்னி. நீ உன் இயல்பை என்றும் கைக் கொண்டு நிற்பாயேல், நீ சிறந்து மெய்யின் சேய் என்று காண்பாய், ப-ரை:--உன் இயல்பை உனது இலக்கணங்களை, முன்னர் உரைத்துள்ளேன் - முதல் அதிகாரத்தில் கூறியுள்ளேன். அதை நன்றாக-(நீ) அதனைச் சரியாக, மேல்மேலும் ஊக்கமுடன் உன்னி-மேலும் மேலும் ஊக்கத்தோடு நினைந்து. (தீ) உன் இயல்பை - நி உனது இலக்கணங்களை, கைக்கொண்டு நிற்பாயேல்-விடாது நிற்பாயானால், நீ சிறந்து - நீ சிறப்புற்று, மெய்யின் - (கீ) மெய்ப்பொருளினது, சேய் என்று - குழந்தை என்று, காண்பாய்- அறிவாய்.