பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 மெய்யறிவு. துறந்து கடந்து, சந்ததமும் மன்னும் - எக்காலமும் நிலைத்து நிற்கும், மெய்ப்பொருளில் - கடவுளோடு, ஐக்கியமாய்-ஏகமாய், வீடு உற்று-பந்த நீக்கம் அடைந்து, வாழ்த்திருப்பர் - பேரின்பத்தை எய்தி நிற்பர்.

க-ரை:-சுவர்க்க வாழ்வும் ஒரு முடிவை அடையும். அவ்வாறே நரக வாழ்வும் ஒரு முடிவை அடையும். தன் நிலையை எய்தியவரோ மெய்ப்பொருளில் ஐக்கியமாய் எஞ்ஞான்றும் பேரின்பத்தில் வாழ்ந்து நிற்பர்.

பொறிவாயிற் றுன்பமுறல் புன்னரக மாங்குப் பொறிவாயி லின்பமுறல் பொன்னா-டறிவாய்நீ யிவ்விரண்டு நீத்தநிலை யேமோக்க மிங்கன்றி யெவ்விடத்து மூன்றிலெது மில். (௪௯) அ-ம்:-பொறிவாயிலால் துன்பத்தை உறலே புல் ரகம். பொறிவாயிலால் இன்பத்தை உறலே பொன்நாடு, இவ்விரண்டையும் நீத்த நிலையே மோக்கம். (இம்) மூன்றில் எஃதும் இங்கன்றி (வேறு) எவ்விடத்திலும் இல், (இந்த உண்மையை) நீ அறிவாய்.

ப-ரை:- பொறிவாயில் துன்பம் உறல் - மெய் வாய் கண் மூக்குச் செவிகளால் துன்பங்களை அது பலித்தலே, புல் நகரம் - இழிந்த நரகம். பொறி வாயில் இன்பம் உறல்-மெய் வாய் கண் முக்குச் செவிகளால் இன்பங்களை அநுபவித்தலே, பொன் நாடு உயர்ந்த சுவர்க்கம்.இவ்விரண்டும் நீத்த நிலையே -