பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

ப-ரை :--கொலை-கொல்லுதலும், களவு - திருடு தலும், கள்-கள்ளுண்டலும், காமம்- காமமும், பொய்-பொய்கூறலும், என்றும் - எக்காலத்தும், எள் அள வும்-ஒரு சிறிதும், உளத்தும்-மனத்தினும், இலை என் றக்கால்-இல்லை யென்றால், மலையளவு - மலை போன்ற பெரிய, நோயும் - பிணிகளும், நொந்து அழியும் - வருந்தி நீங்கும் ; மெய்ப்பொருளை-கடவுளை, ஆயும்-ஆராயும், அறிவும்-ஞானமும், மிகும்- அதிகப்படும். க-ரை :-- கொலை முதலிய பஞ்ச மா பாதகங் களையும் ஒருவன் தனது நினைப்பினும் கொள்ளாது விடுவானுயின், அலனை அடுத்த பலவகைப் பிணிக ளும் நீங்கும் ; கடவுளை உணரும் அறிவும் அதி கரிக்கும்.. எண்ணும்மைகள் தொக்கன. கொலைசெயலுங்சொல்வெனலுங்கொல்வாரைச் சேர்ந்து நிலையு தலுங் கொல்லற்கு நெஞ்சோ-டலையுதலுங்கொன்றதனைத் தின்றிடலுங் கூறிடலு மாக்குதலு மொன்றற்கின் னுசெயலு மொன்று. (உ) அ-ம் :--செய்யுள் நடையே அநுவய நடை. ப-ரை:- கொலை செயலும்-ஓர் உயிரைக் கொல் லுதலும், கொல் என லும்-நீ கொல் என்று ஏவுத லும், கொல்வாரைச் சேர்ந்து நிலையுதலும் - கொலை செய்வாரைக் கூடி நிற்றலும், கொல்லற்கு நெஞ் சோடு வுலையுதலும் - கொலை செய்தற்காக மனத் தோடு சேர்ந்து அலைதலும், கொன்றதனைத் தின்றி