பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

மதங்களைதல். 55 லாலும் சூதாட்டத்தாலும் பிறர் பொருளைக் களர் தலம், அங்கு அனைய எல்லாம் - அது போன்ற செயல்கள் அனைத்தும், அது-கனவேயாம். க-ரை:- பிறன் பொருளைத் திருடுதல் மாத் திரம் களவு என்று கருதற்க, பிறபொருளைத் திருடுமாறு ஒருவனை ஏவுதல் முதலிய செயல்கள் அனைத்தும் களவே. ஆங்கு அனைய வெல்லாம் என்பது இறந்தான் பொருளைக் கவர்தல், மறந்தாள் பொருளைக் கவர்தல் முதலியவற்றைக் குறித்து நின்றது. எண்னும்மைகள் தொக்கன. கள்ளுண்ணக் காசளித்தல் கள் விற்றல் கள்ளாக்கல் கள்ளுண்ணுத் தீயாரைக் காதலித்த-லுள்ள நிலை மாய்க்குமரன் றன்மையுள மற்றவற்றை யுட்கொள்ளல் தாய்க்குமடுங் கள்ளருந்தல் தான். (நச) அ-ம் :-- செய்யுள் நடையே அநுவய நடை, ப-ரை:--கள் உண்ண க் காசு அளித்தல் கள்ளை உண்ணுவதற்காக ஒருவனுக்குப் பொருளைக் கொடுத் தலும், கள் விற்றல்-கள்ளை வைத்து விற்றலும், கள் ஆக்கல்-கள்ளை இறக்குதலும், கள் உண்ணும் தீயா ரைக் காதலித்தல்-கள்ளை உண்ணுகின்ற பாவிகளை நேசித்தலும். உன் அறிவை மாய்க்கும் உள்ளத்தின் அறிவைக் கெடுக்கும், அதன் தன்மையுள -கள்ளின் குனத்தைக் கொண்டுள்ள, மற்றவற்றை உட்கொள் ளல்- கஞ்சா அபினி முதலியவற்றை உட்கொள்ளு