பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

மதங்களை தல், அவற்றிற்கு உதவி புரிதல், இச்செயல் எல்லாம்.- இச் செயல்கள் யாவும், சிரமமே-காமப்பாவமே. க-ரை:- தனது துணையல்லாரைக் கூடல் முதலியன அனைத்தும் காம மென்னும் பாவமேயாம். பொய்யுரைத்த லாக்கல் : புறங்கூற னிந்தித்தன் மெய்ம்மறைத்தல் கோள்குறளை மேவிடுதல்-வெய்ய வுரைபகர்தல் பொய்க்கட்புறுதியில் கூறல் புரைபடுவ சொல்லலெலாம் பொய். அ-ம் :-- செய்யுள் நடையே அநுவய நடை. ப-ரை :--பொய் உரைத்தல் பொய்யைச்சொல்லுதல், பொய் ஆக்கல்-பொய்யைச் சிருஷ்டித்தல், புறம் கூறல் பிறனது புறத்தில் அவனை இழித்துக் கூறல், நிந்தித்தல் பிறனைவைதல் ; மெய்மறைத்தல்உண்மை வெளிப்படாது செய்தல், கோள் மேவிடு தல்-புறங்கூறலைக் கேட்டல், குறளை மேவிடுதல்- பிறன் மீது வருத்தத்தை விளைக்கும் சொற்களைச் சொல்லுதல், வெய்ய உரை பகர்தல்-கடினமான சொற்களைச் சொல்லுதல், பொய் நட்பு-அகத்தில் நேசியாது புறத் தில் நேசிப்பது போல நடித்தல், உறுதியில் கூறல்நன்மை பயக்காத சொற்களைச் சொல்லுதல், புரை படுவ சொல்லல் நிறைவேற்றப்படாது போம் வாக் குகளைக் கூறல், எலாம் பொய்-இவையும் இவற்றைச் சம்பந்தித்த பிறவும் பொய்யென்னும் பாவமாம். க-ரை:- பொய் சொல்லுதல் முதலிய அனைத் தும் பொய்யின் பகுதியிற் படும்.