பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

பறங் களைதல். ஆங்கு அசை, இது மேற் கூறியவற்றிற்கு ஒரு புறனடை. | காலைவரு முன்னெழுந்து கைகால்கள் சித்திசெய்து சீலைதனை மாற்றியுயர் சிற்பொருளை - ஞாலமுள நல்லுயிரு மேர்த்தொழிலு நல்லாசம் வாணிகமுத் தொல்லறமும் வாழத் தொழு. அ-ம்:--காலை வரும் முன் எழுந்து, கை கால் களைச் சுத்தி செய்து, சீலைதனை மாற்றி, ஞாலத்துள்ள நல் உயிரும் எர்த்தொழிலும் நல் அரசும் வாணிகமும் வாழ உயர் சித்பொருளைத் தொழு. ப-ரை:- காலை வரும் முன் எழுந்து - விடிவதற்கு முன்னர்ப் படுக்கையை விட்டு கழுத்து, கைகால்கள் சுத்திசெய்து கைகளையும் கால்களையும் கழுவி, சிலை தனை மாற்றி-இரவு உடுத்திருந்த உடையைக் களை ந்து வேறு உடையை உடுத்துக்கொண்டு, ஞாலம் உள-புவியில் உள்ள, நல் உயிரும் நன்மை புரியும் உயி ர்களும், ஏர்த்தொழிலும் விவசாயமும், நல் அரசும்:நன்மை புரியும் அரசுகளும், (ஈல்) வாணிகமும்-நல்ல வியாபாரங்களும், வாழ-பெருகும் பொருட்டு, உயர் சித்பொருளை - மேலான அறிவாகிய பரம்பொருளை, தொழு-வணங்குவாயாக. க-ரை:- அதிகாலையில் நித்திரை நீங்கி, முகம் முதலியவற்றைக் கழுவி, சுத்த வஸ்திரம் தரித்து, இவ்வுலகத்தில் நல்ல உயிர்களும், நல்ல விளைவுகளும், கல்ல அரசுகளும், நல்ல வாணிகங்களும் பெருகும் பொருட்டுர் கடவுளை வணங்கு.