பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

மெய்யறிவு. கை கால்கள் என்பவை முகம் முதலியவற்றை யும் அடக்கி கின்றன. இரவு கட்டியிருந்த உடை அசுத்தமாயிருக்கக்கூடு மென்பது பற்றி அதனை மாற் நவேண்டு மென்று சு.றப்பட்டது. தனது நன்மையை மாத்திரம் கருதிக் கடவுளைத் தொழுதல் தாழ்வென்பதும் பல உயிர்களின் நன்மையையும் கருதித் தொழுதல் முதல் உயர்வென்பதும் குறிப்பிக்கப் பட்டன. பின்னுனது நெஞ்சத்துட் பின்னியுள் பாவமெலா முன்னியவை நீக்கற் குறுதிமொழி- பன்னி முதனாளிற் செய்தவெலா மூதறிவா லாராய்க் நிதமான கொள்ளயலை யீர். (ருசு) அ-ம்:- பின் உனது நெஞ்சத்துள் பின்னியுன்ன பாவத்தை யெல்லாம் உன்னி, அவற்றை நீக்கற்கு உறுதிமொழியைப் பன்னி, முதல்நாளில் செய்தவற் றை யெல்லாம் மு.து அறிவால் ஆராய்ந்து, இதமான வற்றைக் கொள், அயலை ஈர். ப-ரை:- பின்-கடவுளைத் தொழுத பின்னர், உனது நெஞ்சத்துள் - உனது மனத்தின் ஆழத்தில், பின்னியுள - பற்றிப் படர்ந்துள்ள, பாவம் எலாம்பாவங்களை யெல்லாம், உன்னி - நினைத்துப்பார்த்து, அவை நீக்கற்கு- அவற்றை விடுவதற்கு, உறுதிமொழி பன்னி-சத்தியம் செய்து கொண்டு, முதல் நாளில்முந்திய தினத்தில், செய்த எலாம். நீ செய்த சகல கருமங்களையும், முது அறிவால் ஆராய்ந்து - பழைமையான அறிவைக் கொண்டு (துல்லலை இன் னவை தீயவை இன்னவை என்று) ஆராய்ச்சி செய்து,