பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

                 மெய்யறிவு
 காலத்துஞ் செய்பாலங் காற்றாப் பறந்தொழியு ஞாலத்து மேம்படுவோகாம்.  

அ-ம் :-- இம் மூன்றில் ஒன்றைச் செய்யின் மற்திரண்டும் எய்தும் ; இம்மூன்றையும் செய்து வருவே மாயின் நம் மூன்று காலத்தும் செய்பாவம் காற்றாப் பறந்து ஒழியும் ; ஞாலத்து நாம் மேம்படுவோம்.

ப-ரை:- இம் மூன்றில் - முந்திய செய்யுளிற் சொல்லப்பட்ட மூன்று செயல்களில், ஒன்று செய்யின்-ஒன்றை (நாம்) செய்தால், மற்றிரண்டும் எய்தும்.. மற்றிரண்டு செயல்களும் நம்மிடம் பொருந்தும் ; இம்மூன்றும் செய்து வருலேமாயின் - இம்மூன்று செயல்களையும் (நாம்) செய்து கொண்டு வருவோமானால், நம்-நமது, மூன்று காலத்தும் - இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் மூன்று காலங் களிலும், செய் - செய்யப்பட்ட, பாவம் - பாவங்கள், காற்றாப் பறந்து ஒழியும் காற்றுப் போல விரைந்து நீங்கும்; நாம் ஞாலத்து மேம்படுவோம்-(பின்னர்) நாம் உலகின் கண் மற்றை எத்தேசத்தாரினும் உயர்ச்சியை அடைவோம். க-ரை :- தவச் செயல்களாகிய மூன்றில் ஒன்றைச் செய்யின், மற்றைய இரண்டும் கைகூடும் ; நாம் மூன்றையும் செய்து கொண்டு வருவோமாயின், நமது மூன்று காலங்களிலும் செய்யப்பட்ட பாவங்கள் நம்மைவிட்டு நீங்கிவிடும்; பின்னர் நாம் உலகத் தில் உயர்ச்சியை அடைவோம்.