பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 மெய்யறிவு. வாய்-மேம்பாட்டை அடைவாயாக; அது-அவ்வாறு உயிர்களுக்குத் தீங்கு புரியாது மேம்பாடு அடைதல்-மெய் சேர்க்கும்-கடவுளோடு சேர்க்கும், ஆறு என்று- மார்க்கம் என்று, காண்பாய்.- அறிவாயாக.

க-ரை:- இவ்வுலகத்திலுள்ள சகல உயிர்களும் கடவுளுடைய குழந்தைகளென்றும் சகல உயிர்களின் உடல்களும் கடவுளது வீடுகளென்றும் நீ ஞாபகத்தில் வைத்து எவ்வுயிர்க்கும் எள்ளளவும் தீங்கு புரியாது மேம்பாடு அடைவாயாக; அவ்வாறு யாதாம் ஓர் உயிர்க்கும் தீங்கு புரியாது மேம்பாடு அடைதல் கடவுளோடு சேர்தற்குரிய வழியென்று அறிவாயாக.

உன்னுடலிற் குன்னுளத்திற் கூறுற்றா லஃதவற்றை மன்னுதலி யற்கையென்று மற்றதனா - லுன்னறிவின் மாசொழிய வஃதொளியை மன்னுமென்று முன்னன்மைக் கீசனரு ளொன்றென்று மெண்.(௭௯)

அ-ம்:-செய்யுள் நடையே அநுவய நடை.

ப-ரை:- உன் உடலிற்கு-உனது சரீரத்திற்காவது, உன் உளத்திற்கு உனது மனத்திற்காவது, ஊறு உற்றால் துன்பம் நேர்ந்தால், அஃது- துன்பம், அவற்றை-சரீரத்தையும் மனத்தையும், மன்னுதல்-பொருந்துதல், இயற்கை என்றும் இயல்பு என்றும், அதனால் அத்துன்ப முறலால், உன் அறிவின்- உனது அறிவைப்பற்றிய, மாசு ஒழிய-குற்றம் நீங்க, அஃது- அவ்வறிவு, ஒளியை - பிரகாசத்தை , மன்னும் என்றும் -பொருந்தும் என்றும், உன் நன்மைக்கு-