மனம்போல வாழ்வு.
இதனைப்பற்றிய மதிப்புரைகளிற் சில:—
“இந் நூல் மிகப் பிரசித்திபெற்ற ஜேம்ஸ் ஆலன் என்னும். ஆங்கிலப் பண்டிதர் இயற்றியுள்ள மிக அழகிய நூல்களில் ஒன்றன் மொழிபெயர்ப்பு. இதன் தமிழ் நடையும் சொற்களும் மிக இனிமையாகவும் ,தெளிவாகவும், மனத்தைக் கவரத்தக்கன வாகவும் இருக்கின்றன. இந்நூலை இயற்றியதற்காக ஸ்ரீமாந் பிள்ளைவர்களுக்குத் தமிழுலகம் மிகவும் கடன் பட்டுள்ளது. தமிழ் ஞானிகளும் யோகிகளும் சொல்லியுள்ள விஷயங்களே இந்நூலிற் சொல்லப்பட்டுள்ளன. இதனைத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் கற்றுணரவேண்டுவது அவசியம்....." —தென் இந்தியா மெயில், மதுரை.
இம்மொழிபெயர்ப்பு மிகநன்றாகவும் அழகாகவும் செய்யப்பட்டுள்ளது. இதன் தமிழ்நடை மிக இனிமையாகவும், தெளிவாகவும், சாதாரண ஜனங்களுக்கும் விளங்கக்கூடியதாகவும் இருக்கிறது. இப்புத்தகத்தை யாவரும் வாங்கிப் படிக்க வேண்டுமென்று நாம் கோருகிறேம்". —ஹிந்து, சென்னை.
“ இந்நூல் தென்னாட்டிற்குத் திலகம் போன்ற தூத்துக்குடியில் "சுதேச : ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை ஸ்தாபித்து, இந்திய மாதாவுக்குத் திருத்தொண்டு புரிந்து வந்து இராஜநிந்தனைக் குற்றத்துக்குள்ளாகி சிறைவாசத்திலிருந்து வருகிற ஸ்ரீயுத் சிதம்பரம் பிள்ளையவர்கள் ஆங்கிலத்தின் நின்று மொழிபெயர்த்த நூலாகும். இது பல அரிய விஷ யங்களடங்கப் பெற்றிருக்கிறது. 'பிள்ளையவர்கள் தம்முடைய ஜெயில் வாசத்திலுங்கூட இந்நாட்டார்க்குதவிசெய்ய வேண்டுமென் றெண்ணியே இத்துறையி லிறங்கியிருக்கிறார்கள் என்பது மிகையாக மாட்டாது.—கமலாஸனி, திருவாரூர்.
“ இம்மைமறு மையின் பயனை யெளிதாக வேயறிந்திங்கெவரு நாடிப், பொம்மலுறு வீட்டின்ப மடைதற்குப் புனிதமிகும் பொருள டக்கி, அம்மம்ம மனம் போல வாழ்வென்றவொரு நூலை யளித்தான் றேசம், செம்மைபெற வவதரித்த சீமானார் சிதம்பநற் செல்வன் றானே.” —சித்தாந்தசரபம். அஷ்டாவதானம் பூவை கலியாண சுந்தர முதலியாரவர்கள், சென்னை .