நகரச் சிறப்பு.
5
பொன்னகர்மின் னாரும் புயல்தவழ்மேல் மாடமுறும்
இந்நகர்மின் னாரும் இனிதாக - மன்னிவிளை
யாடுவார் வீணை தனில் ஆறுமுகன் சீர்களையே
பாடுவார் செந்தமிழால் பண்.
௰௯
வண்டமிழின் ஓதை மறையோர் மறையோதை
கண்டுமொழி யார்பாடுங் கானஒலி - எண்டிசையுஞ்
சேர்ந்தே தினம்பரவுஞ் சிற்பொருளாஞ் செவ்வேளைச்
சார்ந்தோர் புகழெனவே தான்.
௨௰
மஞ்சு தவழ்மேல் மணிமாடம் மீதுலவும்
அஞ்சொல் மடவார் அணிக்குத்தோற் - றஞ்சியே
மீன்தோன்றும் விண்மேல் விரைந்து வரும்மின்னல்
தான்தோன்றி நீங்கும் தளர்ந்து.
௨௧
திங்கள் வதனச் சிறந்தவெழி லால்வென்ற
மங்கையரை வெல்வேன் என வளர்ந்தே--- அங்கதிக
தேசுண் டெழில்தான் சிறந்துமுன் வந்தேபின்
ஆசுண் டொளிமழுங்கு மாம்.
௨௨
வீதிதொறும் கந்தவேள் மிக்கதுதி யேதினமும்
ஓதுமடி யார்க்கும் உறவோர்க்குங் - கோதிலன்பால்
நன்மொழிகள் பேசி நயந்தருந்தச் செய்வார்கள்
இன்னமுதம் ஆங்கே யினிது.
௨௩
எந்த வரையும் இணையிலா திங்குநிற்கும்
சந்தவரை யின்பெருமை சாற்றரிதே - பந்தம்
அகன்றார் உளம்போல் அகன்றோங்கும் மேல்மேல்
குகன்றான் உறைதலின் அக் குன்று.
௨௪