உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

வள்ளியம்மை சரித்திரம்.


வள்ளிதெய்வ யானை மகிழ்நன்கோ யில்பெருமை
உள்ளின் கயிலையென் ஓங்குமே - தெள்ளியநல்
சீர்பெறுமெய்ஞ் ஞானம் திகழ்எம் இறைவனடி
யார்பெருமை போலுமே யாம். ௨௫

ஆதிநடு வந்தமிலா தாநந்த மாய்விளங்கும்
சோதிகுகன் என்றே துதியோதை - மோதுமொலி
வாரிதியை மிஞ்சுமறு மாமுகன்தன் கோயிலினுள்
சிருடனே நாளுஞ் சிறந்து. ௨௬

பொன்னின் மணியின் பொலிந்துயர்மா மண்டபத்தில்
தன்னிகர்தா னேயாகுஞ் சண்முகன்தன் - சந்நிதிமுன்
பான்மொழிமின் னார்ஆடப் பண்சேர் முழவுமுகில்
போன்முழங்கும் தாளம் புரிந்து. ௨௭

பொன்னகரி லுள்ளபலபோகம் பொலிந்தோங்கும்
அந்நகரில் எண்ணான் கறமோங்கும் - அந்நகர்வாழ்
மாந்தரிடம் கல்வி வளரின்பம் ஒப்புரவு
வேந்தரருள் ஓங்கும் மிகுந்து. ௨௮

வள்ளியம்மை பிறப்பு


இன்ன வளமோ டெழில்சேர் நகருதித்து
மன்னுபுகழ் பெற்றஉயர் வள்ளியம்மை - தன்மரபும்
வண்சரித முந்தெரிந்த வண்ணமே செப்பிடுவேன்
பண்புறவே யானும் பரிந்து. ௨௧

சைவ நெறிசேருந் தன்மமுடன் எம்மாண்பும்
எய்தும்வே ளாளர் இனத்தினிது - துய்தாய்த்
திகழ்தா ரகைக்குழுவில் திங்களென ஆங்கோர்
தகவோ டுதித்தவள்ளல் தான். ௩௰