வள்ளியம்மை பிறப்பு.
7
பாகுமொழி யார்மயலாய்ப் பார்க்கும் எழில்வீர
வாகுவெனும் பேரான் வளர்புகழான் - வாகுடனே
பெற்றமைந்த ரிற்சிலர்விண் பெற்றனர்சில் போதினில்வாழ்
வுற்றமைந்தர் ஐவர் உளர்.
௩௧
சண்முகம்பிள் ளையெனவே சாற்றுவள்ளி நாயகன்சீர்
கொண்முகத்தை யல்பாகன் குஞ்சரவேள்-வண்மைசால்
செய்யோன் கிருஷ்ணவள்ளல் சீரோங்கி யேநாளும்
மெய்யேதான் சொல்வோர் விழைந்து.
௩௨
புவிமெச்ச ஓங்கும் புகழ்மிக்கோன் ஆகுஞ்
சிவசுப்பிரமணிய தீரன் - நவில்பள்ளிக்
கூடத்துப் பிள்ளையென்று கூறுவர்க ளாமிவனை
நீடுற்ற சீர்தான் நிறைந்து.
௩௩
பாண்டவரே போல் சிறந்த பண்பினரே யாகவிளங்
காண்டகையோ ராங்கிவர்க ளைவர்களில் - நீண்டபுகழ்
பெற்றுயர்ந்தோன் சீலம் பெறுவள்ளி நாயகமாங்
கற்றுயர்ந்தோன் மிக்க கலை.
௩௪
அன்னவன் பெற்ற அருமைத் திருமைந்தன்
மன்சுப் பிரமணிய மாவள்ளல் - நன்னிதிசால்
சீருற்றோன் மிக்க சிறப்புற்றோன் மற்றிவன்போல்
யாருற்றார் வண்புகழே யீங்கு.
௩௫
ஆங்கவன் முன் செய்த அருந்தவத்தி னால்பெற்ற
பூங்கொடியார் மூவரில்இப் பொன்னனையாள் - ஓங்குதமி
ஆயிரத்தைம் பத்துமூன் றாண்டானி மாதத்தில் [ழ்
தாயளிக்க வந்தாள் தரை.
௩௬