பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளியம்மை பிறப்பு.

9


மாங்குயில்நேர் இன்சொல் மகளி ரொடு தினமும்
ஆங்குவிளை யாடும் அவள்செயலைப் — பாங்கியரெஞ்
ஞான்றும் புகழ்வார் நலமுடைய ளைப்பிரிந்தோர்
ஞான்றும் இரார்காண் நயந்து. ௪௩

மின்னார்க ளோடும் விளையாடி வீணாகப்
பன்னாளை யுங்கழியாள் பால்மொழியாள் — நன்னாவிற்
செந்தமிழே பாடுவாள் சின்மயமே செந்தில்நகர்
வந்தகுகா என்றே மகிழ்ந்து. ௪௪

அன்னைபிதா வோடும் அறுமுகன்வா ழுங்கோயில்
சந்நிதிமுன் போய்நின்று தான்பணிவாள் — வன்ன
மயில்வாக னாஉமையாள் மைந்தனே சந்த
சயிலா எனப்போற்றித் தான். ௪௫

தன்னுடனே சேர்ந்துவிளை யாடுமிளந் தையலர்க்கு
நன்மதியே கற்பிப்பாள் நாள்தோறும் — நன்மதிசேர்
மேலோர்கள் தம்மை விரும்பியடுத் தாரைத்தம்
போலாக்குந் தன்மையே போன்று. ௪௬

பேதை பெதும்பை யெனும்பருவம் பின்போக
மாதுமங்கை யின்பருவம் வாய்ந்தனளே — சீதமதி
முன்திதியில் மேன்மேல் முறையே வளர்ந்தோங்கித்
தன்திகழ்தே சுற்றிடல்போல் தான். ௪௭

கன்னி ருதுவாகிக் காப்புடைதன் இல்லத்து
மன்னியுறை போது மயிலோற்கு — நன்னிலத்து
நாளமலர்மா லைதொடுத்து நல்கி யவன் தனிரு
தாள்மலர்போற் றித்துதிக்குந் தான். ௪௮